பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வேகமாய்ப் போனவள் அப்படியே கிணற்றடியில் நின்று, கணவன் வருகிறானா? என்று சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு திரும்பி விட்டாள். கணவனுக்கும் உள்ளுறச் சிறிது பயம் இருந்தது, அவள் கிணற்றில் விழுந்து இறந்து விட்டால், தான் தள்ளிவிட்டதாக ஊரார் அவதூறு கூறினால் என்ன செய்வது? என்ற அச்சம் அவனைவிட்டு அகலவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, "எதிர் வீட்டில் உள்ள அம்மா வெளியூரில் இருந்து புடவைகள் வாங்கி வந்து விற்கிறாள். மாதா மாதம் இருபது ரூபாய் கொடுத்தால் போதும்” என்றாள் மனைவி. இப்போது நமக்கு வரும் வருமானத்தைக் கொண்டு வாழவேண்டிய சிரமமான நிலைமை உள்ளது. இன்னும் புடவைக் கடன் வேறு மாதம் இருபது ரூபாய்க்கு எங்கே போவது? பிறகு பார்க்கலாம்” என்றான் கணவன். “ஒரு புடவை வாங்கித் தருவதற்கு வக்கில்லை, என்ன வாழ்க்கை இது? நான் கிணற்றில் விழுந்து செத்துப் போகிறேன்” என்று கிணற்றடிக்கு ஓடினாள் மனைவி. கணவன் பேசாமல் உட்கார்ந்திருந்தான். சிறிது நேரத்தில் அவள் திரும்பி வந்து விட்டாள். மறு நாள், தனக்கு சம்பளத்தைக் கொஞ்சம் கூட்டித் தரும்படி முதலாளியிடம் கேட்டுக் கொண்டான் அவன். மேலும், தன் மனைவியின் நச்சரிப்பு தாங்க முடியவில்லை. அடிக்கடி என் மனைவி, கிணற்றில் விழுந்து விடுவேன்” என்று கிணற்றடிக்கு ஒடுகிறாள். எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கறிது” என்று கூறி வருந்தினான். “கிணற்றில் விழுவேன் என்று அவள் சொல்வதற்காக, நீ பயப்படாதே, இனிமேல், அவள் அப்படிச் சொன்னால், தைரியமாக,