பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 நீ கிணற்றில் நன்றாக விழு. எனக்குத் தொல்லை ஒழியும் என்று கூறு.” என்று தைரியம் கூறினான் முதலாளி. “அவள் விழுந்துவிட்டால்,என்ன செய்வது? எனக்கு அவமானம் ஏற்படுமே” என்றான். "அப்படி சொல்லிக் கெண்டிருக்கிறவள், ஒரு நாளும் விழவே மாட்டாள், தைரியமாக இரு” என்றான் முதலாளி. சில நாட்களுக்குப் பிறகு, "இப்படியே வறுமையில் போராடிக் கொண்டிருக்க முடியாது. கிணற்றில் விழுந்து சாகிறேன் என்று சொல்லிவிட்டு, கிணற்றுக்குச் சென்று கொண்டிருந்தாள் “என்னை தொல்லைப் படுத்தாதே, நீ கிணற்றில் விழுவதற்காக நான் பயப்படவில்லை. எல்லோரும் ஒரு நாள் சாக வேண்டியவர்கள் தானே. யாருடைய உயிரை யார் தடுக்க முடியும்?” என்றான். “என்னை சாகவா சொல்கிறாய்? என்று கூறி, அழ ஆரம்பித்தாள். பிறகு அவள், கிணற்றில் விழுவேன்” என்று சொல்வதே இல்லை. இவ்வாறு கணவனைத் தொல்லைப்படுத்துகிறவர்களும் இருக்கின்றனர். 41 மூடர்கள் உயிரை இழந்தனர் சிறிய நகரம் ஒன்றின் அருகில் அண்ணன், தம்பி இருவர் இருந்தனர். அவர்களுக்குச் சொந்தமான ஒரு சிறு குடிசையில் தங்கினர். பெற்றோர், உறவினர் யாருமே அவர்களுக்கு இல்லை. படிப்பும் இல்லை, வேலை எதுவும் இல்லை. இருவரும் நன்றாக கொழுகொழு என்று காணப்பட்டனர். R