பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1

மகிழ்ச்சியாக வாழ்ந்தவன்


ஒரு சிறிய நாடு. அந்த நாட்டின் அரசன் ஒரு சமயம் நோய் வாய்ப்பட்டிருந்தான்.

மருத்துவர்கள் பலர் வந்து பார்த்து, சிகிச்சை அளித்தனர்.

என்ன நோய் என்பதைக் கண்டுபிடிக்க இயலவில்லை நோயும் குணமாகவில்லை. மிகவும் வருந்தினான் அரசன்.

“தன் நோயைக் குணப்படுத்துபவருக்கு நாட்டில் பாதியை அளிப்பதாக” அரசன் அறிவித்தான்.

ஆட்சியில் உள்ளவர்கள் கூடி ஆலோசித்தனர். எந்த வழியும் புலப்படவில்லை.

ஒரு அறிஞர் தனக்குத் தோன்றிய யோசனையைக் கூறினார்.

அதாவது “மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதனைக் கண்டுபிடித்து, அவனுடைய அங்கியை (சட்டை) கழற்றி வந்து, அரசனுக்கு அணிவித்தால், நோய் குணமாகிவிடும்” என்றார்.

கவலையில்லாமல் மகிழ்ச்சியோடு வாழும் மனிதனைக் கண்டுபிடித்து வருமாறு அரசன் உத்தரவிட்டான்.

காவலர்கள் நாடு முழுவதும் தேடி அலைந்தார்கள். ஆனால், அத்தகைய மனிதன் ஒருவன்கூட அகப்படவில்லை. வாழ்க்கையில்