பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 "மறுநாள் இரவு பத்து மணிக்குப் பிறகு, அந்த வட்டாரத்தில் இருந்த பூங்காவில், அண்ணனும் தம்பி குத்துச் சண்டையில் இறங்கினார்கள். மிகவும் கடுமையாக இருவரும் மோதிக் கொண்டனர். ஒரு மணி நேரம் குத்துச் சண்டை தொடர்ந்தது. கடைசியில், இருவருமே தரையில் மூர்ச்சையாகி வீழ்ந்தனர். அவர்கள் உயிர் பிரிந்தது. அந்தப் பெண்ணின் பிரச்சினையும் தீர்ந்தது. மூடத்தனத்தால் உயிரை இழந்தனர் முரடர்கள். 42 திருமணம் செய்து கொள்வது ஏன்? ஒரு ஊரில் ஒரு பணக்காரர் மகளுக்குத் திருமணம் நிகழ்ந்தது. அந்தப் பணக்காரரின் உறவினர் ஒருவர் தம்முடைய ஐந்து வயதுச் சிறுமியை அழைத்துக் கொண்டு திருமணத்துக்குச் சென்றிருந்தார். திருமணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. மேள வாத்தியங்கள் முழுங்கின. மணமகனும், மணமகளும் மனமேடையில் அமர்ந்து இருந்தனர். ஏராளமானவர்கள் வந்து மணமக்களை வாழ்த்தி, பரிசுகள் அளித்துச் சென்றனர். அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமிக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அதற்கு முன், திருமண நிகழ்ச்சியையே அந்தச் சிறுமி பார்த்ததில்லை. “பாப்பா! நீ பெரிய பெண் ஆனதும் உனக்கும் இதேபோல் மிகப் பிரமாதமாகத் திருமணம் நடைபெறும்” என்று சிறுமியிடம் பெருமையாகக் கூறினார் பணக்காரர்.