பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ‘அப்பா! திருமணம் செய்து கொண்டால், கணவனும் மனைவியும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா?” என்று கேட்டாள் சிறுமி. "ஏன் அப்படிக் கேட்கிறாய்? திருமணம் செய்து கொண்டு, கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக, ஒற்றுமையுடன் இருந்து, வாழ்க்கை நடத்தி குழந்தைகளைப் பெறுவதற்காகவே திருமணம் செய்து கொள்வது” என்றார் அந்தப் பணக்காரர். "அப்பா! நீங்களும் அம்மாவும் ஒற்றுமையாக இல்லையே? இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறீர்கள். நீங்கள் அம்மாவை திட்டுகிறீர்கள். அம்மா அழுது கொண்டிருக்கிறாள். அதைக் காணும் போது, எனக்கு அழுகை வருகிறது. அந்த மாதிரியான திருமணம் எனக்கு வேண்டவே வேண்டாம்” என்றாள் சிறுமி. சிறுமியின் சொல்லைக் கேட்ட பணக்காரர் பதில் ஒன்றும் சொல்லாமல் வெட்கப்பட்டார். குழந்தைகள் எதிரில், பெற்றோர் சச்சரவிட்டுக் கொள்வது அவர்களுடைய மனதைப் பாதிக்கும் என்பதை உணர்ந்தார் அவர். 43 இந்த உருவமே போதும் காசி நகரத்தில் காலசர்மன் என்ற அந்தணன் இருந்தான். அவனுடைய தோற்றம் சற்று அருவருப்பாக இருந்தது. அதற்காக அவன் வருந்தினான். தனக்கு அழகான தோற்றமும், செல்வமும் கிடைக்க வேண்டும் என்று நினைத்து, காட்டுக்குச் சென்று கடுமையான தவத்தை மேற்கொண்டான்.