பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 அதை அறிந்த இந்திரன், தன்னை நோய் பிடித்த, அருவருக்கத்தக்க ஒரு நரியின் உருவத்தோடு காலசர்மன் முன்னே வந்து நின்றாள். அந்த நரியின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசியதையும் அதன் உடலின் மீது ஈக்கள் மொய்ப்பதையும் கண்ட காலசர்மன் அருவருப்படைந்து, "ஐயையோ இத்தகைய கோரமான உருவம் படைத்த உயிர்களும் இந்த உலகில் இருக்கின்றனவே! மறுபிறப்பில் செய்த பாவத்தின் பிரதிபலனாகத்தான் இந்தப் பிறவியில் இப்படிப்பட்ட தோற்றத்தைப் பெற்றிருக்கிறது. போலும்! ஆகையால், இந்த விகாரமான உருவத்தைக் காணும் போது, நான் ஏதோ சிறிது அளவே பாவம் செய்திருப்பேன் போலும்! கடவுள் இந்த நரியைப் போல் மோசமான அருவருக்கக் கூடியதாயும் நோய் உடையதாகவும் ஆக்காமல், மனித உருவத்தில் என்னை பிறக்கச் செய்தான் போலும்!” என்று நினைத்துக் கொண்டே தவத்தை கைவிட்டு, காட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பிச் சென்றான் ö了605TL06可。 இருப்பதைக் கொண்டு மனநிறைவோடு வாழ்வதே சிறப்பாகும். 44 பேசுவதும் நடந்து கொள்வதும் ஒரு ஊரில் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் பிறந்த ஒருவன், பலருடைய உதவியால், படித்துப் பட்டம் பெற்றான். பிறகு சிபார்சினால் அரசாங்க வேலையில் அமர்ந்து பின்னர் அதிகாரி ஆனான். அவன் அதிகாரியான பின், எப்பொழுதும் சமத்துவம், சகோதரத்துவம் (அனைவரும் சமம், அனைவரும் சகோதரர்கள்) என்று எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பது வழக்கம்.