பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 45 புரட்சிப் பெண் ஒரு கிராமத்தில் ஒலைக்குடிசை ஒன்றில், ஏழு வயதான சிறுமி பாடம் படித்துக் கொண்டிருந்தாள். அப்போது கிராம அதிகாரி வந்து “உன் அம்மா, அப்பா எங்கே?' என்று கேட்டார். 'அம்மா பசுவைத் தேடிச் சென்றிருக்கிறாள். அப்பா முதலாளி வீட்டுத் தோட்டத்துக்குப் போயிருக்கிறார்” என்றாள் சிறுமி. “வரும் ஞாயிற்றுக் கிழமைக்குள் வரிப்பணத்தைக் கொண்டு வந்து தரவில்லையானால், பசுவைப் பிடித்துக் கொண்டு போய்விடுவேன்.” என் று கடுமையாகக் கூறினார் கிராம அதிகாரி. ‘எங்கள் வீட்டுப் பசுவைப் பிடித்துக் கொண்டு போவதற்கு நீங்கள் திருடரா?” என்று கேட்டாள் சிறுமி. “சிரித்துக் கொண்டே, மக்குப் பெண்னே! நான் திருடன் அல்ல! திருடன் சொல்லிவிட்டுத் திருட மாட்டான்” என்றார் கிராம அதிகாரி. “பிறகு, ஏன் எங்கள் பசுவைக் கொண்டு போக வேண்டும்?” என்று கேட்டாள் சிறுமி. 'அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரி செலுத்தாதனால் உங்கள் பசுவைக் கொண்டு போவேன்” என்றார் அதிகாரி. “வரி என்றால் என்ன? அரசாங்கம் ஏன் வரி போடுகிறது? அரசாங்கத்திடம் பணம் கிடையாதா? அது எங்களைப் போல் ஏழையா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள் சிறுமி.