பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 “வரி போடுவது பொதுமக்கள் நன்மைக்காகவே, மருத்துவ உதவி, கல்வி வசதி, போக்குவரத்துக்காக சாலை போடுதல், பாலம் அமைப்பது, கலவரம், திருட்டு நடக்காமல் பாதுகாப்பது, ஊழியர்களுக்குச் சம்பளம், இப்படியாக பல தேவைகளுக்கு அரசாங்கத்துக்கும் பணம் தேவைப்படுகிறது. அதற்காகவே வரி போடப்படுகிறது” என்றார் அதிகாரி. “எங்கள் தேவைகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். அரசாங்கம் எதுவும் எங்களுக்குச் செய்ய வேண்டாம், அதனால் நாங்கள் வரி செலுத்த மாட்டோம்” என்றாள் சிறுமி “வயதான பின்னர் நீ எல்லாவற்றையும் தெரிந்து கொள்வாய், இப்பொழுது விளக்கிச் சொல்ல இயலாது. உன் அம்மா வந்ததும் கிராம அதிகாரி வந்தார் என்று சொல்” என்று கூறி புறப்பட்டார். “இந்தப் பெண், பெரியவளானபின் ஒரு புரட்சிக்காரியாக ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று நினைத்துக் கொண்டார். உலகில் அரசியல், கல்வி சமூகம் ஆகியவற்றில் பல புரட்சிப் பெண்கள் தோன்றியுள்ளனர். 46 மூன்று பேரையும் தேள் கொட்டியது ஒரு ஊரிலிருந்து மூன்று இளைஞர்கள் வேலை தேடி அடுத்த ஊருக்குப் புறப்பட்டார்கள். வழியில் ஒரு அரச மரத்தின் அடியில், மிகப் பெரிய பிள்ளையார் சிலை காணப்பட்டது. அந்தப் பிள்ளையாரின் தொப்புள் பெரிதாக இருந்தது. அதில்