பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 ஏதாவது இருக்குமா என்று நினைத்து, ஒரு விரலை அதில் நுழைத்தான் ஒருவன் அங்கே தேள் ஒன்று அவனைக் கொட்டியது. “ஆகா தொப்புளுக்குள் புனுகு இருக்கிறது!” என்றான் விரலை வைத்தவன். அவன் சொல்லை நம்பி, இரண்டாவது இளைஞனும் தொப்புளில் விரலை வைத்தான். அவனையும் தேள் கொட்டியது. ஆகா, புனுகு இருக்கிறது" என்றான். மூன்றாவது இளைஞனும் அவர்களைப் போல் தொப்புளில் விரலை வைத்தான். அவனையும் தேள் கொட்டியது. ஆனால், அவன் எதுவும் சொல்லவில்லை. இப்படித்தான் தனக்கு நேர்ந்த துன்பம், பிறருக்கும் ஏற்படவேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். 47 உழைப்பினாலா? கருணையினாலா? ஒரு மளிகை வியாபாரியிடம் முஸ்லிம் இளைஞரும், கிறிஸ்துவ இளைஞரும் பணிபுரிந்து வந்தனர். வியாபாரி ஒரு நாள், பணப்பையை வீட்டுக்கு எடுத்துப் போக மறந்து கடையிலேயே வைத்து விட்டு, மறதியாகச் சென்று விட்டார். இரண்டு நாள் கழித்து கடைக்கு வந்தபோது, பணப்பை வைத்த இடத்திலேயே இருந்ததைக் கண்டார். பணமும் பையில் வைத்த படியே இருந்தது. இரண்டு வேலையாட்களுமே யோக்கியமானவர்கள் என்று மகிழ்ச்சி அடைந்தார் வியாபாரி. ஒருநாள் , இரண்டு வேலையாட்களையும் கூப்பிட்டு, “நீங்கள்