பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இருவரும் எதனால் வாழ்கிறீர்கள்?’ என்று கேட்டார். “உழைப்பால் வாழ்கிறேன்” என்றான் முஸ்லிம் இளைஞன். “தங்கள் கருணையால் வாழ்கிறேன்” என்றான் கிறிஸ்துவ இளைஞன். சில நாட்களுக்குப்பிறகு, ஒரு பரங்கிக் காயை கிறிஸ்துவ இளைஞனுக்கும், மூன்று ரூபாயை முஸ்லீம் இளைஞனுக்கும் கொடுத்தார் வியாபாரி. இருவரும் வீட்டுக்குச் செல்லும் போது, “பரங்கிக்காய் என் கொல்லையில் இருக்கிறது. இதை நீ எடுத்துக் கொள்கிறாயா?” என்று கேட்டான் கிறிஸ்துவ இளைஞன். சரி என்று கூறி, அவனிடமிருந்து பரங்கிக் காயை வாங்கிக் கொண்டு அதற்குப் பதிலாக, மூன்று ரூபாயைக் கொடுத்தான் முஸ்லீம் இளைஞன். வீட்டுக்குச் சென்று, பரங்கிக் காயைக் கீறினான். அதில் ஒரு தங்க மோதிரம் இருப்பதைக் கண்டான். அந்த மோதிரத்தைக் கொண்டு போய் வியாபாரியான முதலாளியிடம் கொடுத்து, தாங்கள் இருவரும் இரவு போகும்போது, மாற்றிக் கொண்ட விவரத்தைக் கூறினான் முஸ்லீம் இளைஞன். வியாபாரி, “நீ உழைப்பினால் தான் வாழ்கிறாய்!” என்ற அவனைப் பாராட்டியதோடு, அந்த மோதிரத்தை நீயே என்னுடைய பரிசாக வைத்துக் கொள்” என்று கூறினார். அவர்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் என்பதை சோதிக்கவே, பரங்கிக்காயினுள் மோதிரத்தை வைத்திருந்தார் முதலாளி