பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 48 நாட்டு மககளை வாழ வைத்தவன் மலையப்பிரபன் என்ற அரசன், ஒரு நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தான். தொடர்ந்து அந்த நாட்டில் மழை பெய்யாததால், பஞ்சம் உண்டாயிற்று. மக்கள் பட்டினியால் வாடி உயிர் இழந்தனர். கால் நடைகளுக்கு தண்ணீரும் இல்லை; தீவனங்களும் இல்லாமை யால் அவை செத்துப் போயின. குடிமக்களின் துயரத்தைக் கண்டு மனம் சகியாமல், அரசன் இரக்கம் கொண்டு பக்கத்து நாடுகளிலிருந்து தேவையான உணவுப் பொருள்களை வரவழைத்து நாட்டு மக்களின் துன்பத்தைப் போக்க முயன்றான். ஆனால், சுயநலமிக்க கரண்டல் காரர்களான அமைச்சர்கள், அரசனின் நல்ல நோக்கம் நிறைவேற விடாமல் சூழ்ச்சி செய்தனர். இளவரசனான இந்திரபிரபன் நாட்டுமக்களின் துன்பத்தையும், அமைச்சர்களின் போக்கையும் அறிந்து வேதனை அடைந்தான். தந்தையிடம் சென்று, “அமைச்சர்களின் தியயோசனை களைக் கேட்டு, குடிமக்களை அழிய விடுவதுதான் ஆட்சி முறையா? மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடிய கற்பக விருட்சம் போன்றவர் அல்லவா அரசர்” என்று வாதாடினான் இளவரசன். அமைச்சர்களின் கைப்பொம்மையாகிவிட்ட அரசன், மகனின் போக்கைச் சிறிதும் விரும்பாமல், "மக்களின் தேவைகளை