பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 அவனுடைய புகழ் எங்கும் பரவியது. மக்கள் போற்றினர். இக்கதையில் தியாகம், பரந்த நோக்கம், சுயநலமின்மையே மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். 49 திறமை மிக்க அமைச்சர்கள் உச்சயினி என்ற சிறிய நாடு. அதை புண்ணிய சேனன் என்ற அரசன் ஆட்சி செய்தான். நாடு வளமாக இருந்தது. மக்களும் நலமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். அதைக் கண்டு பொறாமை கொண்டான் பக்கத்து நாட்டு அரசன் பராக்கிரமன் என்பவன். அவ்வப்போது, சிறு சிறு எல்லைச் சண்டைகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்தான் பகைவனான பராக்கிரமன். திடீரென ஒரு நாள், உச்சயினி நாட்டின் மீது முற்றுகையிட்டு விட்டான் அந்த பராக்கிரமன். - உச்சயினியின் படைபலம் பகைவனுக்கு ஈடுகொடுக்கத் தக்கதாக இல்லை. எதிர்த்துப் போரிட்டால், நிச்சயம் தோல்வி ஏற்படும் என்பது அமைச்சர்களுக்கு நன்கு தெரியும். அதனால், அமைச்சர்கள் கூடி, ஆலோசனை நடத்தி, ஒரு திட்டம் தீட்டி, அதன்படி செயல்பட்டனர். உச்சயினி அரசனையும் ராணியையும் மாறுவேடத்தில், பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்தனர். பிறகு, அரசனும் ராணியும் இறந்து விட்டதாக செய்தியை எங்கும் பரவச் செய்தனர். இறுதிச் சடங்கைச் செய்வது போல ஒரு பாசாங்குச் சடங்கையும் செய்து முடித்தனர்.