பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 50 குற்றங்களைத் தடுக்க வழி ஒரு நாட்டை அடுத்துள்ள மலைப்பகுதியில் முனிவர் ஒருவர் தியானத்தில் ஆழ்ந்து இருந்தார். அந்தப் பகுதியானது கொள்ளைக்காரர்களுக்குப் புகலிடமானது. தாங்கள் நகரத்தில் கொள்ளையடித்த பொருள்களை, மறைத்து வைப்பதற்கும், தாங்கள் ஒளிந்து கொள்வதற்கும், அந்த இடத்தைப் பயன்படுத்தி வந்தனர். ஒரு நாள், கொள்ளையர்கள் அங்கே மறைத்து வைத்திருந்த பொருள்களை எடுத்துப் போக வந்தனர். ஆனால், பொருள்கள் காணப்படவில்லை. கொள்ளையர்கள் முனிவர்மீது சந்தேகப்பட்டு, “நாங்கள் இங்கே மறைத்து வைத்திருந்த பொருள்களைக் கான வில்லையே; அவை எங்கே?' என்று கேட்டனர். “நான் எதையும் அறியேன்!” என்றார் முனிவர். அவர் கூறியதை நம்பாத கொள்ளையர்கள் முனிவரை அடித்து, துன்புறுத்திக் கேட்டார்கள். முனிவர் மீண்டும், "நான் எதையும் அறியேன்” என்று கூறினார். கொள்ளையர்களுக்குச் சந்தேகம் தீரவில்லை. முனிவரைக் கத்தியால் குத்தி, சித்திரவதை செய்தார்கள். அப்போதும் முனிவர். "நான் எதையும் அறியேன்” என்றார். அதோடு முனிவரை விட்டு விட்டு, கொள்ளையர்கள் ஒடிவிட்டனர். மறுநாள் வேட்டைக்கு வந்த அரசன் முனிவரின் பரிதாப நிலையைக் கண்டு வருந்தி, என்ன நடந்தது என்று விசாரித்தான்.