பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறினார் முனிவர். உடனே காவலர்களை ஏவி, கொள்ளையர்களைத் தேடிப் பிடித்துக் கொண்டு வருமாறு கட்டளையிட்டான் அரசன். கொள்ளையர்கள் பிடித்து வரப்பட்டனர். அவர்களுக்கு மரண தண்டனை விதித்தான் அரசன். முனிவர் புன்முறுவலுடன், “அரசே! அவர்களைக் கொல்வ தால், என்ன நன்மை ஏற்படும்? அவர்களுடைய முரட்டுத் தனத்தால் அவ்வாறு நடக்கின்றனர். அவர்கள் கைகளில் உள்ள கத்திகளே அவர்களை இயங்க வைக்கின்றன. அவர்களுக்குக் கல்விப் பயிற்சி இல்லாமையாலும், பசியாலுமே இவ்வாறு செய்யத் தூண்டுகிறது. நாட்டில் கல்விப் பயிற்சியும், தொழில்களும் பெருகச் செய்தால் அவர்கள் திருந்தி விடுவார்கள்” என்றார். அரசனும் அதை ஏற்று நாட்டில் கல்வி கற்க வசதியும், தொழில் பயிற்சியும் உண்டாக ஏற்பாடு செய்தான். கொள்ளையர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தான்.