பக்கம்:சிறுவர் செய்யுட் சோலை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சிறுவர் செய்யுட் சோலை

    (ஒளவையார் அருளிய) 1.கொன்றை வேந்தன் பகுதி. 1.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

(கருத்து) தாயும் தகப்பனும் முதலில் அறிந்து வணங்கக் கூடிய கடவுள் ஆவார்கள். 2. ஏவா மக்கள் மூவா மருந்து. (கருத்து) தாய் தந்தையர்கள் கட்டளை யிடுவதற்கு முன்னமே வந்து வேலே செய்யும் பிள்ளைகள், அவர்களுக்கு அழிவு உண்டாக்காத தேவாமிர்தம் போன்றவர் ஆவார்கள்.

3. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. (கரு) பொறாமை பேசுதல் நன்மைக்கு அழிவு உண்டாக்கும்.

4. கெடுவது செய்யின் விடுவது கருமம். (கரு)ஒருவன் கெடுதல் செய்தால் அவனுடைய சினேகத்தை விட்டு விடுவது நல்ல காரியமாகும்.

5. கைப்பொருள் தன்னின் மெய்ப் பொருள் கல்வி. (கரு) கையில் இருக்கும்

வேறு செல்வங்களைக்காட்டிலும்,

கல்வியே உண்மையான செல்வமாகும்.

6. கெளலை சொல்லின் எவ்வருக்கும் பகை. (கரு) ஒருவன் பிறனுடைய பழிகளைச் சொல்லிக்கொண்டு இருந்தால் எல்லோருக்கும் பகையாவான்.

7. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு. (கரு) பிள்ளைகளே ! பெற்றவருக்கு கடமையாவது பிறர் பார்த்துக் கல்வி அறிவில் சிறந்தவர்கள் என்று பிறர் சொல்லும் படியாகத் தம் பிள்ளைகளை ஆக்குதலாம்.

8. சூதும் வாதும் வேதனை செய்யும். - (கரு) சூது ஆடுவதும், பிறரை எதிர்த்து வாதாடுவதும் துன்பத்தை உண்டாக்கும்.

9. சோம்பர் என்பவர் தேம்பித்திரிவர். (கரு) சோம்பல் உடையவர் என்று சொல்லப்படுபவர் என்றும் வறுமையினால் வருந்தி அலைவார்கள்.

10. தந்தை சொல் மிக்க மந்திரம் (கரு) தகப்பனாருடைய சொல்லைக் காட்டிலும் உயர்ந்த மந்திரம் வேறு ஒன்றும் இல்லை.

11. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை. (கரு) கும்பிடுவதற்குத் தாயைக் காட்டிலும் உயர்ந்த கோயில் வேறு ஒன்றும் இல்லை.

12. தேடாது அழிக்கின் பாடாய் முடியும். (கரு) ஒருவன், தான் சம்பாதிக்காமல் முன்னோர் வைத்துப் போன செல்வத்தை அழித்தால், பின்னே துன்பமாய் முடியும். 13. நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும். (கரு) நல்ல சினேகம் அல்லாத கெட்ட சினேகம் துன்பத்தைத் தரும். 14. நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு. (கு) நல்ல புத்தகங்களிலே உள்ள நீதிகளைத் தெரிந்து கொண்டு, நல்லொழுக்கத்தோடு நடப்பாயாக.

15. பாலோ டாயினும் காலம் அறிந்து உண். (கரு) பால் கலந்த சாப்பாட்டைச் சாப்பிடுவது என்றாலும், சாப்பிடக்கூடிய நேரம் தெரிந்தே சாப்பிட வேண்டும். 16. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர் (கரு) தீமைகள் என்று சொல்லப்படுபவை எல்லாவற் றையும் நீக்கி விடுவாயாக.