பக்கம்:சிறுவர் செய்யுட் சோலை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுள் பிறந்த பதரா கும்மே. (கரு) படிக்காத ஒருவன் தன் சாதியின் பெருமையைப் பேசுதல், நெல் பயிரோடு தோன்றிய பதருக்கு ஒப்பாகும். 14. எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பார். (கரு) எந்த வமிசத்தில் பிறந்தாலும், எவ்விதமானவரா யிருந்தாலும், அவ்வமிசத்தில் படித்திருப்பவரையே, மேலான இடத்திற்கு வா என்று எல்லோரும் அழைப்பார்கள். 15. கேளும் கிளையும் கெட்டார்க்(கு) இல்லை. (கரு) கெட்டுப்போனவருக்குச் சினேகிதரும், சொந்தக்காரரும் இருக்கமாட்டார்கள். 16. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா. (கரு) செல்வமும், ஏழ்மையும் ஒரே இடத்தில் நிலைத்து நிற்காது. 17. சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர் அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர். (கரு) ஒரு காலத்தில் புகழும், செல்வமும், மேன்மையும் உடையவராய் இருந்தவர்கள், மற்றொரு காலத்தில் ஏழ்மை யால், தருமத்திற்குச் சாப்பாடு போடும் ஒர் இடத்தை அடைந்தா அலும் அடைவார்கள். 18. குன்றத் தனை யிரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே அழியினும் அழிவர். - (கரு) மலையளவு பெருஞ் செல்வத்தைப் பெற்றவர்களும், அச்செல்வத்தைப் பெற்ற அன்றைய நாளிலேயே, அநுபவிக்காமல் அழிந்தாலும் அழிவார்கள். 19. எழுநிலை மாடம் கால் சாய்ந்(து) உக்குக் கழுதை மேய்பாழ் ஆயினும் ஆகும். (கரு) எழு அடுக்குக்களை உடைய மாடமாளிகை, அடிச்சுவரோடு சாய்ந்து விழுந்து, கழுதை மேயக்கூடிய பாழ் இடமாக ஆனாலும் ஆகும்.

20. இரந்தோர்க்(கு) ஈவதும் உடையோர் கடனே. (கரு) ஒரு தொழிலும் செய்ய மு. டியாமல் பிச்சை எடுக்கும் நொண்டி, நோயாளி முதலானவருக்கு உதவவேண்டியதும் செல்வர்க்குக் கடமையாகும்.

    (ஔவையார் அருளிய)
     3.மூதுரை பகுதி

1. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்து போல் காணுமே -அல்லாத ஈரமில்லா நெஞ்சத்தார்க்(கு) ஈந்த உபகாரம் நீர்மேல் எழுத்திற்கு நேர். (கரு) நல்ல ஒருவருக்குச் செய்த உதவி, கல்லின் மேல் எழுதின எழுத்தைப்போல் என்றும் நிலைத்து நிற்கும். அன் பில்லாத,மனம் உடைய கெட்டவருக்கு செய்த உதவி ,தண்ணீரின் மேல் எழுதிய எழுத்தைப் போல் உடன் அழிந்து விடும். 2. நல்லாரைக் காண்பதுவும் நன்றே _நலமிக்க, நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு) இணங்கி இருப்பதுவும். நன்றே. (கரு) நல்லாரைக் காண்பதுவும் நல்லது, நன்மை மிகுந்த நல்லவருடைய பேச்சைக் கேட்பதுவும் நல்லது. நல்லவருடைய குணங்களை எடுத்துச் சொல்லுவதும் நல்லது. அந்த நல்லவரோடுசேர்ந்து பழகுவதும் நல்லது.

3. நெல்லுக்(கு)இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்_தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் ஆவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை . (கரு) நெற் பயிருக்காக் இறைக்கப்பட்ட தண்ணீர், சிறிய வாய்க்காலின் வழியாக ஒடி, அங்கே உள்ள புல்லுக்கும் கசிந்து பாயுமாம், அதுபோல, பழமையாகிய இவ்வுலகத்தில் நல்லவர் ஒருவர் இருப்பாரேயானால், அவருக்காகப் பெய்யக்கூடிய மழை, எனைய எல்லோர்க்கும் சேர்த்துப் பெய்யும்.

7