பக்கம்:சிறுவர் செய்யுட் சோலை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. நற்றா மரைக்கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல் கற்றாரைக் கற்றரே காமுறுவர்-கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம். (கரு) நல்ல தாமரைக் குளத்தில் நல்ல அன்னப்பறவை சேர்ந்து இருப்பதைப்போல, படித்தவர்களைப் படித்தவர்களே விரும்பிச் சேர்வார்கள். சுடுகாட்டில் உள்ள பிணத்தைக் காக்கை விரும்புவதைப்போல, படிக்காத முரடர்களைப் படிக்காத முரடர்களே விரும்பிப் பொருந்துவார்கள். 5. மன்னனும் மாசறக் கற்றேனும் சிர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச் சென்றஇடம் எல்லாம் சிறப்பு. (கரு) ஒர் அரசனுக்குத் தன் தேசத்தில் தவிர ஏனைய தேசத்தில் அவ்வளவு பெருமையில்லை. ஆனால், படித்தவனுக்கோ போன இடங்களில் எல்லாம் பெருமை உண்டு. ஆகையால், அரசனையும், பிழையில்லாமல் படித்தவனையும் ஒத்திட்டுட் பார்த்தால், அரசனைக் காட்டிலும் படித்தவனே உயர்வுடையவன் என்பதை உணரலாம்.

(கவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் அருளிய)

  4. பாப்பா பாட்டுப் பகுதி.

1. ஒடி பாப்பா-நீ ஒய்ந்திருக்க லாகாது பாப்பா ! கூடி விளையாடு பாப்பா-ஒரு குழந்தையை வையாதே பாப்பா ! (குறிப்புரை) வையாதே-திட்டாதே. 2. சின்னம் சிறு குருவி போலே-நீ திரிந்து பறந்து வா பாப்பா ! வன்னப் பறவைகளைக் கண்டு-நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா (கு) வன்னம்-நிறம்

3. பாலைப் பொழிந்து தரும். பசு மிக நல்லதடி பாப்பா வாலைக் குழைத்து வரும் நாய்தான் மனிதர்க்குத் தோழனடி பாப்பா கு) பொழிந்து_கறந்து தோழன்_சிநேகிதன்.

    4. வண்டி இழுக்கும் நல்ல குதிரை-நெல்லு

வயலில் உழுது வரும் மாடு அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு-இதை ஆதரிக்க வேணுமடி பாப்பா ! (கு) ஆடு நம்மை அண்டிப் பிழைக்கும்; ஆதரிக்கவேணும் --காப்பாற்ற வேண்டும். . 5. காலை எழுந்த உடன் படிப்பு-பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு-என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா !(கு) கனிவு-உருக்கம். 6. பொய், சொல்லக் கூடாது பாப்பா-என்றும் புறம் சொல்ல லாகாது பாப்பா ! தெய்வம் நமக்குத் துணை பாப்பா-ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா ! (கு) புறம் சொல்லலாகாது-கோள் சொல்லக்கூடாது. 7. சோம்பல் மிகக் கெடுதி பாப்பா,-தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா, தேம்பி அழும் குழந்தை நொண்டி,-நீ திடங் கொண்டு போராடு பாப்பா. -- (கு) சோம்பல்-முயற்சியின்மை; திடம்-வன்மை. 8. தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற-எங்கள்தாய்: என்று கும்பிடடி பாப்பா ! அமிழ்தில் இனியதடி பாப்பா-நம் ஆன்றேர்கள் தேசமடி பாப்பா !

             9