பக்கம்:சிறுவர் செய்யுட் சோலை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(கு) தமிழ்நாட்டை, எங்களுடைய பெற்ற தாய் என்று எண்ணிக் கும்பிட வேண்டும். அமிழ்தில்-தேவாமிர்தத்தைக் காட்டிலும 9. சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி, உயர்ந்த மதி, கல்வி-அன்பு நிறைய உடையவர்கள் மேலோர். (கு) மதி-அறிவு

  (கவி சுப்பிரமணிய பாரதியார் 
   அவர்கள் அருளிய)              
      5. முரசுப் பகுதி.

1. ஒற்றைக் குடும்பம் தனிலே-பொருள் ஒங்க வளர்ப்புவன் தந்தை : மற்றிைத்த்க்ருமங்கள் செய்தே-மனை வாழ்ந்திட்ச் செய்பவள் அன்னை. (கு) ஒரு குடும்பத்திலே செல்வத்தைச் சம்பாதிப்பவன் தகப்பன். மற்றைய வீட்டுக் காரியங்களை யெல்லாம் செய்து குடும் பத்தை வாழச் செய்பவள் தாய். 2. சாதிக் கொடுமைகள் வேண்டாம்-அன்பு தன்னில் செழுத்திடும் வையம் ; ஆதரவுற்று இங்கு வாழ்வோம்-தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம். - கு) வையம்-உலகம் ஆதரவு-ஒருவாக்கு ஒருவர் உதவி செய்தல். மாண்பு-நல்ல சிறப்பு. 3. கண்கள் இரண்டினில் ஒன்றைக்-குத்திக் காட்சி கெடுத்திடலாமோ ? பெண்கள் அறிவை வளர்த்தால்-வையம் பேதைமை அற்றிடும் காணிர் !

             10

(கு) இரண்டு கண்களில் ஒரு கண்ணக் குத்திப் பார்வையைக் கெடுக்கலாமா ? கூடாது; அதுபோலவே ஆண்,பெண் என்னும் இருவருள் பெண்களின் அறிவை வளராமல் தடுக்க கூடாது. அவர்களின் அறிவை வளர்த்தால், உலகம் அறியாமை நீங்கி வாழும். பேதைமை-அறியாமை. காட்சி-பார்வை. 4.தீயினைக் கும்பிடும் பார்ப்பர் திக்கை வணங்கும் துருக்கர், கோயில் சிலுவையின் முன்னே-நின்று கும்பிடும் யேசுமதத்தார் 5.யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம், பாருக்குள்ளே தெய்வம் ஒன்று-இதில் பற்பல சண்டைகள் வேண்டாம். (கு) உலகத்தில், நெருப்பை வளர்த்து, அதைக் கும்பிடும் பார்ப்பனர், தினந்தோறும் திசையை நோக்கிக் கும்பிடும் முகமதியர், சிலுவையின் முன்னே நின்று கும்பிடும் கிறித்துவர் முதலிய எல்லோராலும் கும்பிடப்படுவதும், எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நிற்பதும் ஆகிய தெய்வம் ஒன்றே. ஆகையால், தெய்வத்தின் பேரால் பல சண்டைக்ள் வேண்டாம். நித்தம்-தினந்தோறும். பாருக்குள்-உலகத்தில். 6. உடன் பிறந்தார்களைப் போலே-இவ்வுலகில் மனிதர் எல்லாரும் ; இடம் பெரிதுண்டு வையத்தில்-இதில் ஏதுக்குச் சண்டை செய்வீர் ? (கு) இவ்வுலகத்திலுள்ள மனிதர்கள் எல்லோரும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகளைப் போன்றவர்கள். இவ்வுலகத்தில் எல்லோரும் வசிப்பதற்கு இடமும் மிகப் பெரியதாய் இருக்கின் றது. அப்புடியிருக்க, எல்லோரும் எதற்காகச் சண்டைபோட்டுக் கொள்ள வேண்டும் ?

               11