பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


அன்புத் தாயைக் கண்ட போதும்
ஆசைப் பொருள்கள் கிடைக்கும் போதும்
துன்பம் சேர்க்கும் அடிமை வாழ்வு
தொலைந்த போதும் தோன்றும் வாழ்வில்
இன்பம் இன்பமே! - ஆ! ஆ!
இன்பமே இன்பமே!

கருத்து மிகுந்த பாட்டின் இசையும்
காட்டு முல்லைப் பூவின் மணமும்
சிரித்துக் காட்டும் இயற்கை யழகும்
தென்றல் காற்றும் நல்ல நினைப்பும்
இன்பம் இன்பமே!-ஆ! ஆ!
இன்பம் இன்பமே!

உண்மை யான நண்ப ரோடும்
உலகம் அறிந்த புலவ ரோடும்
தண்மை யாகப் பேசு கின்ற
சான்றோ ரோடும் சேரும் போதில்
இன்பம் இன்பமே!-ஆ! ஆ!
இன்பம் இன்பமே!

3