பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


இல்லா தொருவன் கேட்டாலே - தம்பி
இருந்தால் கொடுத்தே உதவிடுவாய்
இதுதான் தருமம் அறிந்திடுக - தம்பி
இதுதான் ஈகை அறிந்திடுக!

காலும் கையும் இல்லாதோர் - தம்பி
காசும் பணமும் இல்லாதோர்
நாலு பேரை நம்பித்தான் வாழ்க்கை
நடத்த வேண்டும் தெரிந்துகொள்!

ஈஈ என்று சிரித்தபடி - வந்து
இரக்கும் ஏழைக் கிரங்கிடுவாய்
ஆ!ஆ! என்று மகிழ்ச்சியுடன் - தம்பி
அள்ளி அள்ளிக் கொடுத்திடுவாய்!

ஏதும் கிடைக்கும் என நம்பிக் - கையை
ஏந்தி வந்து நிற்போனை
ஏமாந் தோடச் செய்யாதே - தம்பி
இயன்ற மட்டும் கொடுத்திடுவாய்!

4