பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒழுக்கம் உயர்வை உண்டாக்கும்
உண்மைப் புகழை உண்டாக்கும்
முழுக்க முழுக்கப் பாராட்டும்
மூத்தோர் நட்பை உண்டாக்கும்

நம்பிக் கையை உண்டாக்கும்
நன்மை யாவும் உண்டாக்கும்
துன்பந் தன்னை உடன்போக்கும்
தூயோர் உறவை உண்டாக்கும்

அறிவு மிக்கோர் பெய ரோங்கும்
ஆற்றல் மிக்கோர் செய லோங்கும்
உறவு கொண்டோர் வாழ் வோங்கும்
ஒழுக்கங் கொண்டோர் சிறப்போங்கும்!

10