பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒர்தல் என்றால் ஆராய்தல் என்றே
உணர்ந்து கொள்ளடி - என் தங்கமே நீ
தெரிந்து கொள்ளடி.

ஓர்ந்து செய்த செயல்கள் வெற்றி
உண்டாக்கும் காணடி - என் தங்கமே நீ
நன்றாகப் பாரடி.

சிந்தித்துப் பின் செயல் புரிந்தோர்
சிறப்படைந் தாரடி - என் தங்கமே நீ
மறக்கலாகா தடி.

அறிவு மிக்கோர் ஆராய்ந் தேதான்
யாவும் செய்வாரடி - என் தங்கமே தீ
தானும் அறிவாயடி.

ஓர்தல் ஒன்றே உண்மை அறிவை
உயர்வாக்கும் காணடி - என் தங்கமே நீ
அயராமல் கேளடி!

11