பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சன்ன லோரம் நின்று கொண்டே
என்ன தம்பி பார்க்கிறாய்?
மின்னல் போலே ஓடுகின்ற
வண்டி யெல்லாம் பார்க்கிறேன்!
அங்கும் இங்கும் செல்லுகின்ற
ஆட்களையும் பார்க்கிறேன்!
சன்ன லோரம் நின்று கொண்டே
என்ன தம்பி காண்கிறாய்?
வீதிக் காற்றும் ஓடிவந்து
வீட்டுக் குள்ளே நிறையுது!
மோதிப் பாயும் காற்றில் வெப்பம்
முழுக்க முழுக்கக் குறையுது
சன்ன லோரம் நின்று கொண்டே
என்ன தம்பி காண்கிறாய்?
வீட்டுக் குள்ளே பூட்டிக் கொண்டு
வேறு வேறாய் இருந்தவர்
கூட்டும் உறவும் கொண்டு தெருவில்
குலவிப் பழகக் காண்கிறேன்!

16