பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஊ ஞ் ச ல்


உந்தி உந்தித் தள்ளலாம்
உயர உயரப் போகலாம்
அந்த ரத்தில் ஏறியே
ஆடிக் கீழே இறங்கலாம்!

வான கத்தைத் தொட்டபின்
வந்து கீழே இறங்கலாம்
போன வேகத் தோடு பின்
புறத்தில் ஏறிப் போகலாம்!

மரமும் செடியும் கொடிகளும்
மற்றும் உள்ள பொருள்களும்
தரையோ டாடக் காணலாம்
தாவி ஊஞ்ச லாடினால்!

ஊஞ்ச லாடும் போதிலே
உலகம் ஆடல் போலவே
தோன்றும் காட்சி காணலாம்
துள்ளித் துள்ளி யாடலாம்!

3

17