பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




அப்பா அப்பா வாருங்கள்
அழகான படம் பாருங்கள்
எப்போதும் இந்தப் படத்திலே
இருக்கும் தாத்தா சிரிக்கிறார்!

பல்லில் லாமல் என்னையே
பார்த்துப் பார்த்தேன் சிரிக்கிறார்?
சொல்ல வேண்டும் இப்போதே!
சொல்ல வேண்டும் அப்பாவே!

இந்த நாட்டில் சுதந்திரம்
ஏற்படத் தாம் உழைத்தவர்
இந்தத் தாத்தா தானப்பா!
காந்தித் தாத்தா காணப்பா!

பிழைத்து நாடு விடுதலை
பெற்ற தற்குச் சிரிக்கிறார்!
உழைத்த பலனும் கிடைத்ததால்
உண்மை யாகச் சிரிக்கிறார்!

18