பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூ மணக்குது தோட்டத்திலே - சந்தனப்
புகை மணக்குது வீட்டுக்குள்ளே
தேன் மணக்குது காட்டுக்குள்ளே - வெட்டி
வேர் மணக்குது நீருக்குள்ளே!

பச்சைக் குழந்தை சிரித்திருக்கும் - தாய்ப்
பால் மணக்குது வாயினிலே
மச்சு வீட்டிலே வைத்திருக்கும் - ஊது
வத்தி மணக்குது வாசலிலே!

பா மணக்குது செந்தமிழில் - பாடும்
வாய் மணக்குது மிகமிகவே!
பூ மணக்குது தோட்டத்திலே - நல்லோர்
புகழ் மணக்குது நாட்டினிலே!

19