பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



உலர்ந்து வறண்ட தொண்டை குளிர
உண்ண வேண்டும் தண்ணீரே
மலர்ந்து சிரிக்கும் பூஞ்செ டிக்கும்
வார்க்க வேண்டும் தண்ணீரே

சோறு வடிக்கக் குழம்பு வைக்கத்
தோசை மாவைக் கரைக்கவும்
வேறு சமையல் வேலை கட்கும்
வேண்டும் நல்ல தண்ணீரே

ஆறு குட்டை ஏரி கண்மாய்
அருவி ஓடை கேணியே
மாறில் லாது நீர் வழங்க
மழையு முண்டு பாரிலே

படகில் ஏறிக் கடலில் சென்ற
பையன் ஒருவன் கூறினான்: -
"அடடா! எங்கும் தண்ணீர்! தண்ணீர்!
அருந்தத் தானே முடியலே!"

20