பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




குடுகுடு வென்று நடப்பவன் ஒரு
கோமாளி
கோணிக் கோணி நடப்பவன் ஒரு
நோயாளி
படபட வென்று நடப்பவன் ஒரு
பகட்டாளி
பையப் பைய நடப்பவன் ஒரு
சோம்பேறி.


நெஞ்சுயர்த்தித் தலைநிமிர்ந்து
சிங்கம் போலவே
நேராய் நடக்கும் வீரனுக்கே
பெருமை சேருமாம்
அஞ்சிடாத ஆண்மையோடு
காளை போலவே
அழகாய் நடக்கும் வீரனையே
யாரும் விரும்புவார்!

21