பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உதைத் துதைத்துத் தள்ளியே
ஒடித் தொடர்ந்து செல்லுவார்
பதைப் படைந்தே எதிரிகள்
பாய்ந்து வந்து மறித்துமே
உதைத்த பந்து வானிலே
உயரக் கிளம்பி மீண்டுமே
குதித்து வந்த பக்கமே
'கோலை'நோக்கி ஓடுமாம்!

கோலைக் காத்து நிற்பவன்
குறுக்கில் ஒடிப் பிடித்ததைக்
காலால் எற்றித் தள்ளுவான்
காற்றாய்ப் பறந்து போகுமே!
ஒல மிட்டுக் கூவியே
ஒடிப் பந்தை எதிரியின்
கோலுக் குள்ளே தள்ளினால்
கொள்ள லாகும் வெற்றியே!

22