பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இலையும் தழையும் குழையும் காயும்
எல்லாம் பச்சை பச்சை
தலையின் முடியும் விறகின் கரியும்
கண்ணின் மணியும் கருப்பு

பாலும் சுண்ண நீரும் அரிசி
மாவும் வெள்ளை வெள்ளை
மாலை வானும் நாவும் இரத்த
நீரும் காணில் சிவப்பு

காலை வெயிலும் மஞ்சட் கிழங்கும்
பொன்னும் நெல்லும் மஞ்சள்
நீலக் கல்லும் பொடியும் வானும்
கடலின் நீரும் ஊதா

ஆரஞ் சுப்பழம் கத்திரிப் பூவென்று
ஆய வண்ணம் இரண்டாம்
பாரில் இந்த நிறங்கள் கலந்த
பலப்பல வண்ணம் உண்டாம்.

27