பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பழந் தின்னம்மா பழந்தின்னு
உரித்த வாழைப் பழந் தின்னு

பழுத் திருக்கும் மாம்பழம்
பலாப் பழத்தின் நற்சுளை
சாத்துக் கட்டி ஆரஞ்சு
சத்து நிறைந்த அன்னாசி
பார்த்துப் பறித்த பப்பாளி
பரங்கிச் சீமை ஆப்பிளி
பழந் தின்னம்மா பழந்தின்னு
உரித்த வாழைப் பழந்தின்னு

முத்துப் போலே மாதுளை
முழுதும் இனிக்கும் விளாம்பழம்
விற்றுத் திரியும் கொய்யாவும்
விழிபோல் கரிய நாவலும்
வாங்கி வாங்கித் தின்னம்மா
வயிறு நிறையத் தின்னம்மா
பழந் தின்னம்மா பழந்தின்னு
உரித்த வாழைப் பழந்தின்னு.

28