பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குருவி ஒரு பறவை
கோழி ஒரு பறவை
அருவிக் கரை யோரம்
அலையும் கொக்கும் பறவை

கழுகும் ஒரு பறவை
காகம் ஒரு பறவை
அழகுத் தோகை விரித்தே
ஆடும் மயில் பறவை

சேவல் ஒரு பறவை
சிட்டும் ஒரு பறவை
கூவி இசை பாடும்
குயிலும் ஒரு பறவை.

30