பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒன்று ஒன்று ஒன்று
ஒழுக்க வாழ்வே நன்று
இரண்டு இரண்டு இரண்டு
என்றும் செய்யேல் முரண்டு
மூன்று மூன்று மூன்று
முயன்றால் வெற்றி தோன்றும்
நான்கு நான்கு நான்கு
நல்லோர் புகழே ஓங்கும்
ஐந்து ஐந்து ஐந்து
அன்பே வாழும் உயர்ந்து
ஆறு ஆறு ஆறு
அறிவு தான்முன் னேறும்
ஏழு ஏழு ஏழு
என்றும் நன்றே வாழும்
எட்டு எட்டு எட்டு
எவ்விப் பாய்த்தால் கிட்டும்
ஒன்பது ஒன்பது ஒன்பது
உதவா தேபொய் என்பது
முட்டை முட்டை முட்டை
முடிவில் லாத முட்டை.

32