பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆறுவது சினம்


தீயைக் கக்கும் எரிமலையும்
சீறி வீசும் புயல் காற்றும்
பாயும் வெள்ளப் பெருக் கெடுப்பும்
பாரில் தீமை மிக்கனவாம்,

ஒருவன் கொள்ளும் கோபத்தால்
உண்டாம் தீமை பலவாகும்
பருவம் தவறிப் பொழிகின்ற
மழைபோற் பயனைக் கெடுப்பதுவாம்,

ஒருவன் செய்கை பிடிக்காமல்
உள்ளம் சினத்தைக் கொள்ளுமெனில்
அறிவின் திறத்தால் அதை வென்றே
ஆறி யிருத்தல் நலமாகும்

39