பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை


குழந்தைக் கவிஞர் திரு அழ. வள்ளியப்பா அவர்கள்


திரு. நாரா நாச்சியப்பன் குழந்தைகளுக்காகப் பல்லாண்டுகளுக்கு முன்பே எழுத தொடங்கினார். பதினோராண்டுகளுக்கு முன்பு இவர் எழுதிய ‘மூன்றாவது இளவரசன்’ என்ற கதைப் புத்தகம் பலரது உளளத்தைக் கவர்ந்தது. அக்கதை இன்றும் என் உள்ளத்தில் பசுமையாய் உள்ளது. இப்போது இவர் இயற்றித் தந்துள்ள பாடல்களும் குழந்தையுள்ளம் கவர்வனவாய் இருத்தல் கண்டு மிக்க மகிழ்ச்சியுறுகின்றேன்.

ஊக்கம் வேண்டும் என்பதை வலியுறுத்தும் பாடலின் இறுதியிலே,

“உயர்ந்த மலையும் கடு காகும்
ஊக்கம் உள்ளவன் முன்னாலே
அயர்ந்து நிற்பவன் உள்ளத்தில்
அணுவும் பெரிதாய்த் தோன்றுமடா.”

என்று அழகுறக் கூறப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

இப்படிப் பல நற்கருத்துக்களை சிறுவர் உலகம் விரும்பும் வகையில், அகர வரிசையில், அழகிய தமிழில் கவிஞர் திரு. நாச்சியப்பன் அவர்கள் தந்திருப்பது பாராட்டத்தக்கது. குழந்தைக் குலத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற பேரவாவுடன் முன்வந்துள்ள இக்கவிஞர் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து, மேன்மேலும் இத்தகைய சீரிய பணிகளைச்செய்ய ஆண்டவன் அருள் சுரப்பானாக.

— 1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுவர்_பாட்டு.pdf/5&oldid=1246129" இலிருந்து மீள்விக்கப்பட்டது