பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஏற்ப திகழ்ச்சி


உழைக்க இரண்டு கையிருக்க

உடலில் நல்ல வலுவிருக்க

பிழைக்க ஒன்றும் செய்யாமல்

பிச்சை ஏற்பது இழிவாகும்.

பெற்றோர் அன்பு கொண்டாடிப்

பேணி நம்மை வளர்த்தாலும்

கற்றுச் சிறந்து பெரும்ைபெறக்

கைமா றியற்றல் கடனாகும்.

பாடு பட்ட பலன்பெறலாம்

பரிசுப் பொருளை ஏற்றிடலாம்

தேடிச் சென்று பல்காட்டித்

தேவை முடித்தல் இழிவாகும்.

45