பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஈயார் தேட்டைத் தியார் கொள்வர்

தேடித் தேடிப் பணம்சேர்ப்பார்
சேர்த்த தெல்லாம்பெட்டகத்தே
மூடி மூடிப் பூட்டிவைப்பார்
முயன்று மேலும் சேர்த்திடுவார்.

உறவுக் காரர் யாருக்கும்
உதவி புரிய மாட்டாரே
அறமும் செய்யார் மக்கட்கும்.
அளியார்கருமித் தனத்தாலே.

ஈயா திருப்புப் பெட்டகத்தே
இறுக்கி வைத்த பணமெல்லாம்
தீயார் பொல்லார் திருடர்க்கே
சேரும் இறுதிக் காலத்தே|

55