பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

உலகில் உள்ள தொழிற்கெல்லாம்
உயிராய் இருப்பது கணக்காகும்
பலகால் அதனைக் கருத்துன்றிப்
பயிலல் மிக்க சிறப்பாகும்.

எழுத்துக் கூடிச் சொல்லாகி
இயைந்து கருத்துத் தொடராகி
உளத்துப் பிறந்த எண்ணமெலாம்
உரைக்கும் மொழியாய் விரிவாகும்.

வழுவில் லாத மொழிபேச
;வகைசெய் கின்ற இலக்கணமும் பழுதில் லாத தொழில்செய்யப்
பயனாம் கணக்கும் இருகண்ணாம்.


58