பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

<poem>

 ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவு 

உலக மக்கள் எல்லோரும்

உயர்ந்த வாழ்வு பெற்றின்ப

நலங்கள் எய்த வேண்டுமென

நாடி உழைத்தல் அறிவாகும்.


வாழும் ஒருவன் நிலைகண்டு

வாடிப் புழுங்கிப் பேசுவது

தாழும் அறிவாம்: தன்நிலையைத்

தானே தாழ்த்திக் கொள்ளுவதாம்.


ஆக்கம் மிக்கார் போல்தானும்

அனைத்து நலமும் பெறவேண்டின்

ஊக்கத் தோடே எந்நாளும் - - -

உழைத்து.முயன்றால் உயர்வுண்டாம்.

<poem> 63