பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6



சுதேசமித்திரன்

அனுபவத்தால் தெளிந்த நீதிகளைச் சிறு வாக்கியங்களில் ரத்தினச் சுருக்கமாக ஒளவையார் கூறினார். அரிச்சுவடி படிக்கும் பாலகர்க்கும் இது நினைவில் மறவாது நிற்கவேண்டி அகர வரிசையில் நீதி வாக்கியங்களைப் பாடினார்.

இந் நூலாசிரியரும் அன்பு, ஆசை, இன்பம், ஈகை என்று பண்புகளையும் பொருள்களையும் அகர வரிசைப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு சொல்லையும் தலைப்பாகக் கொண்டு சிறு சிறு பாட்டுகள். மொத்தம் 32. ஒவ்வொரு பாட்டிற்கும் நல்ல படம்.

பாட்டுக்கள் எளிமையாக இருக்கின்றன.

உயர்ந்த மலையும் கடுகாகும்
ஊக்க முள்ளவன் முன்னாலே
அயர்ந்து நிற்பவன் உள்ளத்தில்
அணுவும் பெரிதாய்த் தோன்றுமடா!

என்று பேசுகிறது ஊக்கத்தைப் பற்றிக் கூறும் பாடல். இது போல பல பாட்டுகள். நல்ல ஆர்ட் அட்டை, நிறையப் படங்கள். சிறுவர்கள் விரும்பும் விதத்தில் அமைந்திருக்கின்றன.

மன்றம்

தமிழில் உள்ள எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் முதன்மைப்படுத்தி, ஒவ்வொரு பாட்டை ஆசிரியர் தந்துள்ளார். சிறுவர்களுக்கு ஏற்ற நடையில், நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுவர்_பாட்டு.pdf/8&oldid=1246132" இலிருந்து மீள்விக்கப்பட்டது