பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

 பல கருத்துக்களைத் தாங்கிப் பாடல்கள் உள்ளன. பாடல்களில் இசையும் மணமும் ஒன்று கூடி வருகின்றன; கருத்து உயர்ந்து விளங்குகிறது.

“சிறுவர் பாட்டு” தொடக்க நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற நூல்.

செந்தமிழ்ச் செல்வி

இந்நூல் கண்கவர் வனப்பினதாய்ப் பாட்டுக்குப் பொருத்தமான பன்னிற வண்ண ஒவியங்களுடன், உயர்ந்த தாளில், அழகிய எழுத்துக்களால் ஆக்கப்பட்டுள்ளது. பாட்டுக்கள் கற்பார்க்கு எளிதில் மனத்தில் தங்கும் முறையாக அகர வரிசையில் கோத்துள்ளார்கள்.

சிறுவர்க்கு வேண்டிய இன்றியமையாத பயனுள்ள பாடல்களை ஆசிரியர் எண்ணி இனிமையும் எளிமையும் இன்பமும் பொதுளப் பாடியுள்ளார். இசையமைதியும் ஆற்றொழுக்கமும் கவர்ச்சி நடையும் பொருந்தியன எல்லாப் பாட்டுக்களும். இது பாட்டுப் புத்தகமாக அமைந்திருப்பினும் ஏடு தொடங்கும் மாணவர்கட்கு ஒரு புடை நெடுங் கணக்கு (அரிச்சுவடி)ப் போன்றும் அமைந்துள்ளது.

இதனைக் கல்வித் துறையாளர் சிறுவர் வகுப்புக்களுக்குத் துணைப்பாடமாக வைத்துத் துணைபுரிவது நல்லது. ஏனைப் பெருமக்களும் இதனை வாங்கியும் வாங்குவித்தும் ஆசிரியர் மேன் மேலும் இம் முறையில் பல நூல்களை யாத்துத் தமிழுக்கு ஆக்கஞ் செய்யத் துணை புரிவார்களாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுவர்_பாட்டு.pdf/9&oldid=1246133" இலிருந்து மீள்விக்கப்பட்டது