பக்கம்:சிற்றம்பலம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii

பழைய மரபு என்ருல் வேப்பங்காயாக எண்ணும் சிலர், தேவாரம் பாடும் புண்ணியச் செயலே உடையவராக இருந்தும், அப் பாடல்களுக்குரிய பண்ணே மாற்றிச் சினிமா மெட்டில் பாடுவதற்கும் துணிந்து விட்டார்கள். வேதமாக எண்ணிப் பக்தியுடன் பாடுவதற்குரியது தேவாாம். வேதத்துக்குச் சுரம் அமைந்ததுபோலத் தேவாரத்துக்குப் பண்கள் அமைந்திருக் கின்றன. கிருமுறைகளைக் கண்டெடுத்த இராசராசன் அவற்றை அப்படியே வெளிப்படுத்தாமல், பண்களுடன் பாடுவது இன்றியமையாதது என்று அறிந்தே கிருநீல கண்ட யாழ்ப்பாண நாயனருடைய மரபிலுதித்த மங்கையொருத்தியின் உதவியிஞல் பண்களே அமைக்கச் செய்தான். தேவாரத் திருமுறைகளின் வகுப்பே பண்ணே அடிப்படையாகக் கொண்டது. இன்ன இன்ன பண்ணுக்கு இத்தனே பதிகங்கள் என்ற வரையறையை இந்த வகுப்பில் காணலாம். அப்படியிருக்கப் பண்களே மாற்றி ஒது வதும், சினிமாப் பாட்டாக எண்ணும்படி ராகம் அமைத்து ஒது வதும் தேவாரத்துக்குரிய தெய்விகப் பண்பைக் குறைத்துவிடும்.

தேவாரம் ஓதுவதும், தேவாரத்தின் இலக்கியச் சுவையை நுகர்ந்து இன்புதுவதுமாகிய செயல்கள் தமிழ் மக்களிடத்தில் மிகுதியாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தினுல் இதனே இங்கே தெரிவிக்கலானேன். கிருமாலடியார்கள் கிவ்யப் பிரபந்தத் தைப் பாதுகாக்கும் முறையையும், அதற்கு உரை பல தோன்றிச் சிறப்புற்று விளங்கும் செய்கியையும் கினைத்துப் பார்த்தால் தேவாரத்துக்குச் சிவனடியார்கள் செய்தது எள்ளளவுகடட இல்லை என்பது தெரிய்வரும். தேவாரம் மீண்டும் பழைய நில்ை யைப் பெறுவதோடு, அதிலுள்ள இலக்கியச் சுவையை அறிந்து இன்புற்றும் பிறரை இன்புறச் செய்தும் வரும் முயற்சிகள் பல்க வேண்டுமென்று இறைவன் திருவருளே வழுத்துகிறேன்.

மயிலாப்பூர்,

`ಟ್ಟ |

கி. வா. ஜகந்நாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/10&oldid=563153" இலிருந்து மீள்விக்கப்பட்டது