பக்கம்:சிற்றம்பலம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றம்பலம்

சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலங்கள் பல. சிவபெருமானுடைய வழிபாடு எந்தக் காலத்தில் உண் டாயிற்றென்று இன்னும் வரையறுக்க முடியவில்லை. சிந்து வெளியில் மொகெஞ்சதரோவில் ஐயாயிரம் ஆண்டு களுக்கு முன் வாழ்ந்த மக்கள் சிவலிங்கப் பெருமானே வழி பட்டு வந்தார்கள் என்ற செய்தி அந்தப் பகுதியில் அகழ்ந் தெடுத்த பழம்பொருட் சிதைவுகளால் தெரியவருகின்றது." பாரதகாட்டில் சிவ வழிபாடு இருந்ததோடன்றி, ஜாவா முதலிய காடுகளிலும் இருந்தது என்பதை ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்து உரைக்கின்றனர்.

இவ்வாறு உலகில், பல இடங்களிலே பரவியிருந்த சிவவழிபாடு தமிழ்நாட்டில் சிறப்பாக நிலவுகிறது. சிவ பெருமானுக்குரிய கோயில்கள் இந்த காட்டில் இருப்பது போல வேறு எங்கும் இல்லை. ஊர்தோறும் கோயில்கள் பல இன்றும் இருக்கின்றன.

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் '

என்பதும், ஊரானேர் தேவகுலம்' என்ற மேற்கோளும் தெய்வத் திருக்கோயில்களின் அவசியத்தை உணர்த்து கின்றன. திருக்கோயில் இல்லாத ஊர் திருவில்லாத ஊரென்றும், மக்கள் வாழாமல் விலங்கினங்கள் வாழும்

  • “Among the many revelations that Mohanjadaro and Harappa had in store for us none perhaps is more remarkable than this discovery that Saivasm has a history going back to the chalcolithic age or perhaps even further still and that it thus takes place as the most ancient iiving faith in the World.” —Sir Jhor, Marshall.

f Relation of Indian Art with Java by Dr. J. Ph. Vogel, pp. 17, 21.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/11&oldid=563154" இலிருந்து மீள்விக்கப்பட்டது