பக்கம்:சிற்றம்பலம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுவோ அருள்? I9

தம்பால் வந்தாருக்கு வேண்டியவற்றைத் தரும் கிலேயை அடியார் களுக்குத் தருவது.) .

"இடரினும் தளரினும் நோய் தொடரினும் உன் கழலே தொழும் எனக்கு அருளுமாற்றில் குறை வைக்க லாமா? நஞ்சை மிடற்றினில் அடக்கிய நீ உன் அருளிற் குறை காட்டலாமா?” என்பது குறிப்பால் தோன்றப் பாடினர். - -

இட்ரினும் தளரினும் எனது றுநோய் தொட்ரினும் உனகழல் தொழுதெழுவேன்; கட்ல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே! இதுவோன்மை ஆளுமாறு? ஈவதொன்று எமக்கு இல்லையேல், அதுவோஉனது இன்னருள்? ஆவடு துறை,அரனே!

இந்தத் திருப்பதிகம் பாடியதைப்பற்றிச் சேக்கிழார் பெருமான்,

சென்று தேவர்தம் பிரான்மகிழ் கோயில்முன் பெய்கி கின்று போற்றுவார், நீள்நிதி வேண்டினர்க்கு ஈவது ஒன்றும் மற்றிலேன்; உன் அடி அல்லதொன்று அறியேன்” என்று போருள் வினவிய செந்தமிழ் எடுத்தார் .

என்று பாடுகிருர். ஞானசம்பந்தர் திருவாக்கில் வரும், "ஈவதொன்று எமக்கு இல்லையேல்' என்ற பகுதிக்கு, 'நீள்நிதி வேண்டினர்க்கு ஈவது ஒன்றும் மற்றிலேன்' என்று பொருள் விரிக்கிருர் சேக்கிழார்.

இரப்பவருக்குத் தான் ஈதலோடன்றி, தன் அடியார் கள் தம்பால் இரப்பவருக்கு ஈயும்படியாக அவர்களே வைக்கும் இன்னருள் உடையோன் இறைவன் என்பதை அப்பரும், -

கிருஞான. 424,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/29&oldid=563172" இலிருந்து மீள்விக்கப்பட்டது