பக்கம்:சிற்றம்பலம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - சிற்றம்ப்லம்

திருக்கோலத்தாலும் அறிவுறுத்துகிருன். ஆணும் பெண் ஆணுமாக உலகம் வாழ்ந்து வளரவேண்டும் என்பதைத் தானும் ஆணும் பெண்ணுமாக இருந்து காட்டுகிருன். ஆணும் பெண்ணுமாக வாழும் உலகத்தில் தான் ஆணும் பெண்ணுமாக இருந்து காக்கிருன். அவன் அவ்வாறு இருப் பதல்ைதான் உலகம் ஆணும் பெண்ணும் கலந்த உலக மாக இருக்கிறது. அவன் தனியே யோகியாக அமர்ந்தால் உலகம் முழுவதும் வாழ்விழந்து வீணுகி விடும்.*

இதனே மணிவாசகப் பெருமான் ஒரு பாட்டில் சொல் கின்ருர். -

தென்பால் உகந்தாடும் கில்லைச்சிற் றம்பலவன்

பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி! பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர் விண்பாவி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ!'

இறைவன் பெண்களுக்குள்ளே கல்லாளாகிய உமா தேவியுடன் சீகாழியில் இருக்கிருன். சீகாழி நீர்வளம், நிலவளம், பொருள் வளம், அன்பு வளம் மிக்க நகரம்; வள நகர். அந்த நகரில் எங்கே பார்த்தாலும் நல்ல காட்சி களேயே காணலாம். கண்ணில் விழுவன எல்லாம் கல்லன. வாகவே இருக்கும். இயற்கை அழகும் செயற்கை யழகும் மலிந்த வளங்கரம் அது. கோயிலும் குளமும் மாடமும் மாளிகையும் காண்பதற்கு அழகிய பொருள்கள் அல்லவா?

  • காரண முதல்வன் மோனக் காட்சியால் அமர ரெல்லரம், சூரா மகளிர் தங்கள் துணேமுலேப் போகம் இன்றி, ஆரிடர் கிலேமை தன்னே அடைந்தனர் அளக்கர் சூழ்ந்த, பாரிடை உயிருங் காமப் பற்றுவிட் டிருந்த தன்றே', 'சாலிகள் வளரு மெல்லே தடம்புனல் வறுமைத் தாக, வாலிது குரல்வாங் காது வருத்தொடு மாய்வ தேபோல், மேலவனருளாற் போகம் வெறுத்தலிற் கருமல் கின்றி, ஞாலமன் னுயிர்கள் முற்றும் நாடொறுங் குறைந்த வன்றே.” (கந்தபுராணம், மேருப் படலம், 17, 28)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/34&oldid=563177" இலிருந்து மீள்விக்கப்பட்டது