பக்கம்:சிற்றம்பலம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர நல்குபவர்

இறைவனுடைய அன்டர்களுக்கு உலகில் அவனை யன்றி வேறு துணே இல்லை என்ற உறுதிப்பாடு இருக்கும். தமக்கு வேண்டிய பொருள் ஏதாயினும் மனிதர் கொடுத் துக் கிடைக்கப் போவதில்லை. எல்லாம் அவனருளால் வரவேண்டும் என்ற உண்மையும் தெரியும். ஆதலின் தங்களுக்கு எது வேண்டுமானலும் இறைவனே அணுகி விண்ணப்பம் செய்வார்கள். ஆலவாயில் இறைவனே அருச்சித்து வந்த தருமி என்னும் ஆதிசைவர் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று விரும்பினர்; இறைவ னிடம் விண்ணப்பித்துக்கொண்டார். அவன் பொற்கிழி வாங்கி அளித்தான். பாண்டிய மன்னர்கள் வேண்டிய வற்றை வேண்டியபடியே அப்பெருமான் வழங்கியதைத் திருவிளையாடற் புராணம் விரிவாகப் பேசுகிறது.

மனத்திலே மாசு இல்லாமல் இறைவன்பால் முறுகிய அன்பும், யாம் வேண்டுவனவற்றை யெல்லாம் இறைவன் அருள்வான் என்ற நம்பிக்கையும் உடைய தொண்டர்கள் இயல்பாகவே இறைவனே வழிபடுவதோடு, தமக்கு ஒன்று வேண்டுமானல் உணர்ச்சி விஞ்சிப் பின்னும் சிறப்பாக வழிபடுவார்கள். குழந்தை தனக்கு ஏதேனும் வேண்டு மால்ை தாயினிடம் அழுது சாதித்துப் பெற்றுக்கொள்வது போன்றது. இது. அன்பின் கிலேயில் இதுவும் ஒன்று. பலரிடம் கெஞ்சியும் கொஞ்சியும் வழிபட்டும் பொருள் பெறுவது தொழில்; அன்பன்று. தமக்கு ஆதாரமானவன் இவனே என்று உணர்ந்து அவன் தந்தாலும் தராவிடினும் அவனேயே கச்சி வேண்டுகை அன்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/64&oldid=563207" இலிருந்து மீள்விக்கப்பட்டது