பக்கம்:சிற்றம்பலம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 சிற்றம்பலம்

அதனோடு தொடர்புடைய செயலேப் போல அவர்கள் இறைவனே வழிபடும் வழிபாடும் நிகழ்கிறது. மலர்கொண்டு வணங்குகிருர்கள். அவர்களுடைய பூசையை ஏற்றுக் கொண்டு மகிழ்கிருன் இறைவன். 'இவர்கள் வேறு புகலிட மின்றி நம்மை வழிபடுகிருர்கள். இவர்களுக்கு வேண்டியவற்றை அளிப்பதற்குத்தானே நாம் இருக் கிருேம்' என்று இறைவன் அவர்களுடைய ஆசையெல் லாம் கிரம்பும்படி அருள்செய்கிருன்.

'பரந்துபல் ஆய்மலர் இட்டுமுட் டாதடி யே இறைஞ்சி

இாந்தவெல் லாம்எமக் கேபெற லாம் என்னும்

அன்பர்உள்ளம் காந்துகில் லாக்கள்வனே' என்று மாணிக்க வாசகர் சொல்கிருர்.

அத் தொண்டர்கள் மாசில்லாதவர்கள் என்பதை உணர்ந்தவன் இறைவன். குழந்தை கொஞ்சிக் கொஞ்சிக் கேட்டால் கொடிய தங்தையும் மனங்குழைந்து அதற்கு வேண்டியதை வாங்கி அளிப்பான். எல்லாருக்கும் கல்ல தங்தையாகிய இறைவன் தன் தொண்டர்களுக்கு வேண்டிய வற்றை அருள்வது வியப்பு அன்றே?

‘'வேண்டத் தக்க தருள்வோய்நீ

வேண்ட முழுதும் தருவோய்ரீ' என்பது திருவாசகம்.

மாசில் தொண்டர் மலர்கொண்டு வணங்கிட ஆசை ஆர அருள் நல்கிய செல்வத்தர். (குற்றம் இல்லாத தொண்டர்கள் அருச்சனைக்குரிய மலர் களைத் தேர்ந்து கைக் கொண்டு அருச்சித்து வழிபட அவர்களு டைய ஆசை கிாம்பும்படியாக அருளே வழங்கும் செல்வத்தை

  1. డL.LపH f, - - .

மாசு. நலம் பெற்றல் விரும்புவதும், பெருவிடின் வெறுத்து நீக்குவதுமாகிய இயல்பு. ஆா - கிரம்ப. கல்கிய கொடுத்த.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/66&oldid=563209" இலிருந்து மீள்விக்கப்பட்டது