பக்கம்:சிற்றம்பலம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவைந்தெழுத்து

ஒரு பொருளின்பால் விருப்பம் இருக்குமானல் அந்தப் பொருளினே நன்கு மதிக்கும் இயல்பு மனிதனுக்கு உண்டாகும். ஒருவரிடம் அன்பு இருக்குமாயின் அவ ருடைய குணங்கள் யாவும் விளக்கமாகத் தெரியும்; குற்றங்கள் யாவும் மங்கிவிடும். நுகர்வதற்குரிய பொருள் ஒன்றை நெடுங்காலம் பெருமல் முயன்று வாட்டமுற்று இறுதியிற் பெற்று நுகர்ந்தால் அதனல் வரும் இன்பம் பன்மடங்கு அதிகமாகும். பசி உடையவனுக்கு கல்ல உணவில் மிக்க சுவை தோன்றும். பசியில்லாதவனுக்கு அத்துணைச் சுவை தோன்ருது. வயிற்றுவலிக்காரனுக்குச் சில சமயங்களில் உணவைக் கண்டால் வெறுப்புக் கூடத் தோன்றிவிடும். அந்த வெறுப்புக்கு உணவின் குறை காரணம் அன்று; அவனுடைய வயிற்று வலியே காரணம். -

இறைவனுடைய புகழும் திருநாமமும் இனிக்கின்றன. என்று அருட்பெருஞ் செல்வர்கள் சொல்கிருர்கள். அந்தப் புகழையும் திருநாமத்தையும் நாம் கேட்கும்போது அத்தனே இனிப்பதில்லை. காதலி ஒருத்தி நாலு பேரோடு பேசிக் கொண்டிருக்கும்போது அவளுடைய காதலனைப் பற்றி யாரேனும் புகழ்ந்தால் அவளுக்கு எத்தனே இனிமையாக இருக்கிறது! அவனுடைய பெயர் பத்திரிகையில் வந்தால் அவள் எவ்வளவு முறை பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி அடைகிருள்! மற்றவர்கள் கண்களில் அந்தப் பெயர் பட்டாலும் அவர்களுக்கு அதுபோன்ற மகிழ்ச்சி உண்டாவ தில்லை. அதற்குக் காரணம் என்ன? அந்தப் பெண்ணுக்கு அப் பெயருடையவனிடம் இருக்கும் காதல்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/70&oldid=563213" இலிருந்து மீள்விக்கப்பட்டது