பக்கம்:சிற்றம்பலம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சிற்றம்பலம்

'துஞ்சும் போழ்தும்கின் நாமத் கிருவெழுத்

தஞ்சும் தோன்ற அருளுமை யாறரே” 'ஞானச் சோதிய ராதியர் நாமந்தான் ஆன அஞ்செழுத் தோத" - 'நாமகழுத் தஞ்சாய நம்பர் போலும்' 'எந்தையார் கிருநாமம் நமச்சி வாய

என்றெழுவார்க் கிருவிசும்பில் இருக்க லாமே" "கிருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்" என்று திருநாவுக்கரசரும், -

"ஆசா அமுகின் கிருநாமம் அஞ்செழுத்தும்"

என்று நக்கீர தேவரும் திருகாமமென்றும் சொல்லுதலேக் காணலாம். இதனைப் பெயராக வைத்து விளியாக்கி,

'போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்"

என்று மணிவாசகர் பாடுகிருர் சிவனுக்கு கமஸ்காரம்' என்று சொல்லமைதியாற் பொருள்பெறும் சொற்ருெட ராக வைத்து, மந்திரமாகக் கொள்ளுதல் எல்லோருக்கும் பொதுவான முறை. "நமசிவாய' என்பதை இறைவனுடைய திருநாமமாக வைத்து அதனைப் பெயர்ச்சொல்லாக வழங்குவது தமிழ் மரபு. இந்த மரபு பற்றியே மக்களுக்கு 'நமச்சிவாயன் என்ற பெயரை இடும் வழக்குத் தமிழ் காட்டில் அமைந்தது. திருவாவடுதுறையாதீனத்தின் ஆதி குருமூர்த்தியின் திருநாமமாகிய நீ நமசிவாய தேசிகர் என்பது இந்த வழக்கத்தை நன்கு தெளிவுபடுத்தும்.

இறைவனுடைய திருநாமங்களைக் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதும்போது அன்பர்களுக்கு இன்பம்

திருக்குறுந்தொகை, கிருவையாறு. *கிருக்குறுந்தொகை, திருநாகேச்சாம். கிருத்தாண்டகம், கிருவிழிமிழலை. பொதுத் திருத்தாண்டகம். தனித் கிருத்தாண்டகம். கைகபாதி காளத்திபாதி அத்தாதி. 100. கிருச்சதகம், 62,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/76&oldid=563219" இலிருந்து மீள்விக்கப்பட்டது