பக்கம்:சிற்றம்பலம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - சிற்றம்பலம்

காணும்போது அவற்றைச் சுடரச் செய்யும் சோதி ஒருவன் இருக்கிருன் என்று உணரலாம். மூன்று சுடர்கள் ஒளி விடுதலாகிய ஏதுவைக் கொண்டு சோதி ஒருவன் இருப் பதை உணரலாம். புற இருளே இந்தச் சுடர்கள் போக்கு வதைக் கண்டு அதுபோல அக இருளேப் போக்கும் சோதி ஒருவன் இருக்கிருன் என்று திருஷ்டாந்தம் கொண்டு இறைவனுடைய பெருமையை உணரலாம். இறைவன் இருக்கிருன் மூன்று சுடர்களுக்கும் ஒளி உதவுகின்றவன் அவன்; புற இருளே இச்சுடர்களாலே போக்குவது போல அக இருளே ஞான மென்னும் சுடரால் போக்குவான். இவ்வாறு புறத்தும் அகத்தும் சோதியாகிய இறைவன் சுடர் விட்டுக் கொண்டிருக்கிருன் என்று ஏதுவையும் எடுத்துக்காட்டையும் கொண்டு தெரிந்துகொள்ளலாம். அந்த அளவு போதுமே!

சுடர் விட்டுளன் எங்கள் சோதி.

(புறத்தும் அகத்தும் எங்கள் சோதியாகிய இறைவன் சுடர் விட்டுக்கொண் டிருக்கிறன்.)

இந்த இரண்டு அடிகளுக்கும் பெரிய புராணத்தில் சேக்கிழார் பொருள் கூறுகிருர், 'சங்கரன் தனக்கு ஒப்பு வேறு இல்லாதவன். அதனல் இன்னன், இத்தகையவன், அவனைப் போன்றவன் இவன் என்று சொல்ல ஒண்னது. ஏது, எடுத்துக்காட்டு ஆகிய அவற்ருல் அவனே அளக்க முடியாது” என்பது முதல் அடிக்கு அவர் கூறும் பொருள்.

"மன்னும் எதுக்க ளாலெனும் வாய்மைதான்

தன்ன தொப்புவே றின்மையிற் சங்கரன் * இன்ன தன்மையை ஏது எடுத்துக்காட்டு

அன்ன வற்ருல் அளப்பிலன் என்றதாம்.'

3.

பெரிய புராணம், கிருஞான. 884, நிலைபெற்ற ஏதுக்க ளால் என்னும் கிருவாக்கு, தனக்குரிய ஒப்பாக வேறு பொருள் இன்மையில்ை சங்கரன் தன் தன்மையை, ஏது எடுத்துக் காட்டு என்ற அவற்றல் அளப்பதற்கரியவன் என்று சொன்னபடியாம்’ என்பது இதன் உரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/84&oldid=563227" இலிருந்து மீள்விக்கப்பட்டது